எம்.ஜி.ஆர் பேரன் ஜுனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கும் “கங்கை கொண்டான்” படத்தின் பூஜை

சினிமா

ஜே.ஆர்எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் பேரன் ஜுனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனக நடிக்கும் “கங்கை கொண்டான்” படத்தின் பூஜை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தோட்டத்தில் விமரிசையாக நடந்தது.

இவ்விழாவிற்கு வந்த முக்கிய பிரமுகர்கள் படத்தின் நாயகனுக்கு திலகமிட்டு,அவரது வீட்டிலிருந்து மேள தாளத்துடன் பூஜை நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.

ஜுனியர் எம்.ஜி.ஆரின் தாயார் லதா அம்மாவும்,அரசி படத் தயாரிப்பாளர் வரலட்சுமி அவர்களும் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.

நடிகர்கள் வேல.ராமமூர்த்தி,செந்தில்,சீதா கஞ்சா கருப்பு,காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் சைத்யாநிமிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 படத்தின் இயக்குனர் எஸ்.கே.உதயன் படத்தின் நாயகன் ஜூனியர் எம்.ஜி ராமச்சந்திரன் வரவேற்றனர்.

தளபதி மூர்த்தி தேவர் தலைமை தாங்கினார்.

துபாய் நாடு அமீரக தமிழ்சங்கத் தலைவரும் தொழிலதிபருமான ஆர்.மதியழகன் யாதவ் முன்னிலை வகித்தார்.

  தடயவியல்துறை முன்னாள் இயக்குநர் சி.விஜயகுமார்,தயாரிப்பாளர்கள்வி.சி.கணேசன்.வெள்ளைப் பாண்டியன்,.எம்.சௌத்ரிஜமீன் பி ஆர் பி ராஜா,தொழிலதிபர் கே.எம்.கண்ணன்,டி.கே.செல்லசாமி தேவர்திரைப்பட இயக்குனர் .ஆர்.கே.ராஜராஜாசென்னை ஃபைனான்ஸ் டி.தியாகு,ஆனந்த் ட்ராவல்ஸ் அதிபர் .ஆதிசுப்ரமணியன்,குற்றாலம் .வேலாயுதபாண்டியன் ஆகியோர் வந்திருந்து படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

தயாரிப்பாளர் .சி.பாஸ்கல் ஜீவராஜ் நன்றி உரை ஆற்ற “கங்கைகொண்டான்படத்துவக்க விழா இனிதே நடந்தது.

  பி ஆர்  வி.எம்.ஆறுமுகம்- 09092096558

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *