வெட்டிங் ஓவ்ஸ் கனெக்ட் சார்பில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 101 ஜோடிகளுக்கு இலவச திருமணம் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் நடத்திவைக்கப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் திலக்,தட்சணா, நந்தினி விஜய் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

செய்திகள்

மாமல்லபுரத்தில் உள்ள ராடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் டபிள்யு வி கனெக்ட்டின் பிரமாண்ட தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.

ஜி.ஆர்.டி ஹோட்டல்ஸ் தலைமை செயல் அதிகாரி விக்ரம் கோட்டா, திலக் வெங்கடசாமி, நந்தினி விஜய், என். தட்சணாமூர்த்திஆகியோர் கொடியேற்றி இதனை தொடங்கி வைத்தனர்.

திருமணம் என்பது மனிதர்களின் உளவியலோடு தொடர்புடையது. திட்டமிடலில் ஏற்படும் சிறு பிழையும் மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அந்த பிணைப்பின் உன்னதத்தை உணர்ந்துள்ள தொழில்முறை திருமண முகவர்கள் ,ஏற்பாட்டாளர்கள் பல்வேறு புதுமைகளை கையாண்டு புதிய பந்தத்தில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு பூரண மன மகிழ்ச்சியை வழங்குகின்றனர். இந்த துறையில் உழைப்போடு அர்ப்பணிப்பும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் டபிள்யூ.வி கனெக்ட் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் திருமண திட்டமிடல்களில் சிறந்து விளங்கிய கலைஞர்களின் சாதனைகள் கவுரவிக்கபட உள்ளன. அவர்களுக்கு விருதும் வழங்கப்பட உள்ளது.

டபிள்யூ.வி. கனெக்ட் மாஸ்டர்கிளாஸ் மூலம் சாதனையாளர்களின் அனுபவங்களும் பகிரப்பட உள்ளன. இதன் மூலம் திருமணம் நடத்தும் நபர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, அலங்காரங்கள் முதல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்யும் அவசியம் உள்ளிட்டவை விளக்கப்பட உள்ளன. அதே போல இந்தியாவின் சிறந்த நிறுவனங்களின் ஃபேஷன் ஷோக்களும் நடைபெறுகின்றன. பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளிப்பதோடு இசைக்கச்சேரி மூலம் அவர்களின் காதுகளுக்கும் இனிமை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டபிள்யூ. வி. கனெக்ட் இயக்குனர் நந்தினி விஜய், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள 500 க்கும் மேற்பட்ட திருமண திட்ட வடிவமைப்பாளர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், பொருளாதாரத்தில் பின் தங்கியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 101 ஜோடிகளுக்கு சுமார் 1 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர் இந்த திருமண ஏற்பாடு இந்தியா முழுவதும் பேசப்படும் அளவிற்கு சிறப்பாக இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *