இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாளை‌ முன்னிட்டும் சார்ஜா மைதானத்தில் சச்சனி ஆடிய அதிரடி‌புயல் ஆட்டத்தின் 25ஆவது ஆண்டு‌ நிறைவு ஒட்டி சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சச்சின் பெயரில் ஸ்டான்ட் திறக்க பட்டுள்ளது.

செய்திகள்

இதன் திறப்பு விழாவில் சார்ஜா கிரிக்கெட் சிஇஓ கலாப் புக்காதீர் ,லீப் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ரமேஷ் ராமகிருஷ்ணன்,சார்ஜா கிரிக்கெட் COO சிவகுமார் மெய்யப்பன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் ராமகிருஷ்ணன் ,சச்சின் பிறந்தநாளை ஒட்டி அவர் பெயரில் ஸ்டேடியத்தில் ஸ்டான்ட் அமைக்கபட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் இந்த மூலம் இந்தியர்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவார்கள் என்றார்.

சார்ஜா கிரிக்கெட் சங்கத்தின் COO சிவகுமார் மெய்யப்பன் கூறுகையில் சச்சின் அவர்கள் சார்ஜாவில் ஆடிய அதிரடி ஆட்டத்தின் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அவர்‌ பெயரில் ஸ்டான்ட் அமைக்க பட்டிருப்பது சார்ஜா கிரிக்கெட் அமைப்பிற்கு மகிழ்ச்சியை தருவதாக கூறினார். இது மறக்கமுடியாத தருணமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *