இன்னோக்கேஸ் இந்தியா நிறுவனம் வெற்றி கொண்டாட்டம்

வர்த்தகம்

சென்னை நுங்கம்பாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இன்னோக்கேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் புதிதாக மும்பை பங்குச் சந்தையில் கடந்த மே மாதம் 11-ஆம் தேதி பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே 99.50 சதவீதம் பங்கின் மதிப்பு உயர்ந்தது. மேலும் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரும் சாதனையாக 88 மடங்கிற்கும் அதிகமான சந்தாதாரர்களை பெற்றுள்ளது. இந்த மிகப்பெரும் சாதனையை கொண்டாடும் விதமாக இன்னோக்கேஸ் இந்தியா நிறுவனம் வெற்றி கொண்டாட்டம் (சக்சஸ் மீட்) சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நிறுவனத்தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ் ணன் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக BSE SME & STARTUP தலைவர் அஜய் தாகூர், BSE SME & STARTUP துணைப்பொது மேலாளர் ஆனந்த் சாரி மற்றும் அலோக் MD Gretex பங்கேற்றனர். மேலும் நக்கீரன் கோபால், இந்நிறுவனத்தின் சிஇஓ எஸ். துரைராஜ், சிஎப்ஓ சுகந்தி அருண் பிரசாத் மற்றும் சிஓஓ அஜய் குமார் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *