தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தனது மகன் உருவத்தில் தனது அப்பாவை பார்ப்பதாக சிவகார்த்திகேயன் கூறினார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதல் முறையாக தனது குழந்தை புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட சிவகார்த்திகேயன், தனது குழந்தையின் பெயரையும் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது குழந்தைக்கு ‘குகன் தாஸ்’ என்று பெயர் வைத்துள்ளார். குகன் என்பது முருக கடவுளாகும். தாஸ் சிவகார்த்திகேயனின் தந்தை பெயராகும்.