சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சற்றே ஓய்ந்துள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி முதல் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர்,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
