பெண்ணியத்தை போற்றும் படமாக”மயிலாஞ்சி”

சினிமா

பணம் பதவியில் இருக்கும் இருவர்கள் பெண்கள் என்றாலே போதைப் பொருளாக நினைத்துக் கொண்டு வயசு வித்தியாசம் இல்லாமல் பெண்களை சீரழித்துக்கொண்டு ஒரு கிராமத்தையே நாசம் செய்து வருகின்றனர். அவர்களிடம் தூண்டில் புழுவாய் ஒரு 14 வயது ஏழைப் பெண் மாட்டி விட அவளை நாசம் செய்கின்றனர். அச்சிறுமியும் அவமானம் கருதி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறாள். உணவில் விஷம் கலந்து தாய் தந்தைக்கு தர, கதை நாயகர்களால் தடுக்கப்பட்டு காப்பாற்றப்படுகிறாள். சட்டத்தால் குற்றவாளிகளை ஒன்றும் செய்து விட முடியாது என்று உணர்ந்த அவர்கள் தங்களது நண்பர்கள் உதவியுட னும் தாங்களும் சேர்ந்து வில்லன்கள் இருவரின் குடும்பம் பணம் பதவியைப் பறித்து நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார்கள். கற்பிழந்தவர்களுக்கு தான் தண்டனை என்ற மனப்பான்மையை மாற்றி நம் பாதகத்தை செய்தவர்களுக்கு தண்டனை என்று வரை வைப்பது தான் மயிலாஞ்சியில் கதை. தண்டிப்பதால் மட்டும் குற்றவாளிகள் திருந்துவதில்லை அவர்களாக திருந்தினால் மட்டும் என்ற சிந்தனையை உணர்த்துவது தான் படத்தின் கதைகளம்.

குட் ட்ரை என்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக மயிலாஞ்சி படத்தை
ஏ.வி. தனலட்சுமி தயாரித்துள்ளார். பல படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்த வி.கே.நடராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

நினைத்தாலே இனிக்கும்,மை,மெர்லின் போன்ற படங்களில் நடித்த விஷ்ணு ப்ரியன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக
சென்னை இசைக் கல்லூரி மாணவி ஸ்வேதா ரெட்டி அறிமுகமாகியுள்ளார். ஆந்திர திரை உலகைச் சார்ந்த தீனா, மலையாள திரையுலகை சேர்ந்த ரிஷி பிரகாஷ், அஜய் என்ற புதுமுகமும் வில்லன்களாக நடித்துள்ளனர். குணச்சித்திரத்திற்கு பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தாய்மாமன் முரளி கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தாஸ் சாந்தகுமார்,சதீஷ் எழிலன்,சுதர்சன்,சஞ்சீவ் தக்ஷிதா, ஈஸ்வரி, அம்மு. பவி,கோகிலா மற்றும் சூரியராஜ்ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு-மதன்ராஜ்

இசை-எழிலன் ஏழுமலை

பாடல்கள்-மதன்குமார், எழிலன் ஏழுமலை, தேவதுரை

எடிட்டிங்-கோவிந்த்
நடனம் – பிரகாஷ் செல்வராஜ
ஸ்டண்ட்-ஜாக்கி ஜான்சன்
மககள் தொடர்பு – வெங்கட்

தயாரிப்பு-
ஏ.வி தனலட்சுமி

கதை திரைக்கதை வசனம் இயக்கம்
வி.கே நடராஜன்

ஜல்லிக்கட்டு மனுஷன் இப்ப மண்டியிட்டு கிடக்கேன்… என்ற டூயட் பாடலும் ராஜலட்சுமி செந்தில்கணேஷ் பாடிய ரோட்டோரம் தோட்டத்து ரோசாப்பூ நானு… என்ற குத்து பாடலும் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் முணுமுணுக்க வைக்கும்.

இதன் படப்பிடிப்பு சென்னை, திருவண்ணாமலை, மணலி,திருமழிசை ஆகிய இடங்களில் 35 நாட்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கலைப்புலி ஜி.சேகரன், பட அதிபர்கள் கே.ராஜன், என்.விஜயமுரளி நடிகர்கள் ரோபோ சங்கர், லொல்லு சபா ஜீவா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

இப்படத்தின் பாடல்கள் உரிமையை ஸ்கிரீன் ஃபோக்கஸ் சார்பில் தங்கராஜ் பெற்றுள்ளார். இவரே இதே நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *