இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட “பூங்கா நகரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Uncategorized

இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்கும் படம் பூங்கா நகரம். சஸ்பென்ஸ் கலந்த காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக தமன் குமார், ஹீரோயின் ஸ்வேதா டோரத்தி , பிளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு, சி.எம் இளங்கோவன் எடிட்டிங், பாடல்கள் நா.ராசா, இசை ஹமரா C.V. நடனம் ராபர்ட் மாஸ்டர், சுரேஷ். முக்கிய‌ கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். திருவண்ணாமலையை கதைக் களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றத்தை பிரபல இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார் நேற்று வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *