[18:09, 8/6/2021] Bhuvan Pro: ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றிவாகை சூடி சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அந்த படங்களின் மூலம் குழந்தைகளாக இருப்பவர்கள் முதல்கொண்டு பெரியவர்களையும் குழந்தைகள் மனநிலைக்கு கொண்டு சென்று ரசிக்கச் செய்த பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு. பேய் படங்களின் வித்தியாச முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ்.
அவர் அடுத்தாக தனது தாயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ” துர்கா “
விரைவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவுப்பு வெளியாகும்.
ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் ” ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ” அதிகாரம் ” படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.