வெள்ளை அறிக்கை வெளீயீட்ட திமுக எடப்பாடி பழனிசாமி பதில் Tamil news nba 24×7

வீடியோக்கள்

#ADMK #Edappadipalanisami
வெள்ளை அறிக்கை வெளீயீட்ட திமுக எடப்பாடி பழனிசாமி பதில் Tamil news nba 24×7

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சியில் முன்களப்பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று வழங்கினார்.இதனையடுத்து, எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது.

வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் வரவு செலவு வெளியிடப்படுகிறது.அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறான தகவல் என்றும் பேசினார்.தமிழகத்தில்
கடந்த 2011-ல் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி கடனை திமுக அரசு விட்டுச் சென்றார்கள். படிப்படியாக கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது.பாதிக்கும் மேலாக மூலதனமாக உள்ளது.பல்வேறு மாநிலங்களும் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது.

மின்கட்டணம் பல வருடங்களாக உயர்த்தவில்லை. மின்சாதனங்கள், நிலக்கரி பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.இதனால் அந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியிலும் நடந்துள்ளது. இதேபோன்று டீசல் விலை உயர்ந்த போதிலும் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்த வில்லை. அதனால் அந்தத்துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எந்த அரசு வந்தாலும் இதனை தவிர்க்க முடியாது.

ஏற்கனவே அதிமுக அரசில் போட்ட திட்டங்களுக்குத்தான் அடிக்கல் நாட்டி வருகிறார்கள். 100 நாள் திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றியதாக எனக்குத் தெரியவில்லை. முதலமைச்சர் குறை தீர்க்கும் முகாமில் 9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதே திட்டத்தைத்தான் திமுக அரசும் செயல்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் 100 நாளில் தீர்வு காணப்படும், உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பல முறை பிரசாரக் கூட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதனைத்தான் நாங்கள் கேட்கிறோம். மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்தவுடன் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன. நீட் தேர்வு ரத்து தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகும் இதுவரை நடவடிக்கை இல்லை. 505 அறிவிப்புகளை தேர்தலின் போது தெரிவித்த திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் நிறைவேற்றவில்லை.

இதனைக் கண்டித்துத்தான் தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மக்கள் கொந்தளிப்பாக இருப்பதுதான் இதற்கு காரணம். உள்ளாட்சித் தேர்தல் குறித்து முறையாக மாநில அரசு அறிவித்தவுடன் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவில்தான் இருக்கிறார். ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைவது என்பது தவறான செய்தி,அவர் சொந்த வேலை காரணமாக டெல்லி சென்றுள்ளார்.

அதிமுகவில் அவைத்தலைவர் மதுசூதனன் உயிரிழந்த நிலையில் அவைத்தலைவர் குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் மற்றும் பெகாசஸ் விவகாரம் உண்மை நிலை குறித்து தெரியாமல் கருத்து சொல்ல முடியாது என்றார்.

மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தி உள்ளோம். மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் ஏரிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.திமுக அரசு இதனை நடைமுறைபடுத்தும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

Watch the full video & subscribe for more: https://goo.gl/4MXDBx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *