பாஜக,தமிழக இந்து மக்கள் முன்னணி மீது விடுதலை சிறுத்தைகள் புகார்

மாநிலம்

கோயம்புத்தூர்,ஈரோடு,சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக வியாபாரத்திற்காக மாடுகளை வாகனங்களை ஏற்றி செல்லும் வியாபாரிகளை வழிமறித்து பணம் தரவேண்டும் என்று இந்து அமைப்புகளை சார்ந்த நபர்கள் மிரட்டி வருவதாக தெரிவித்தார்.

மேலும் பணம் தர மறுக்கும் நபர்களின் மீது போலியாக மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் மாடுகளை பறித்து இவர்கள் நடத்தும் கோசாலைகளுக்கு எடுத்து செல்வதாகவும் சில காலம் கழித்து மாடுகள் இறந்து விட்டதாக போலி சான்றிதழ் பெற்று மாடுகளை அவர்கள் விற்பனை செய்வதாக கூறிய அவர் இதனால் வியாபாரிகள் மிக பெரிய நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு முறை அந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர் எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று கூடுதல் டிஜிபியிடம் புகார் அளித்து இருப்பதாகவும் அவரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

மேலும் நடிகை மீரா மீதுன் தொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறிய அவர் விரைவில் அவரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *