தங்கமகன் நீரஜ் சோப்ரா நாடு திரும்பினார் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

செய்திகள் விளையாட்டு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. இதில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றது.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று நாடு திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பதக்கம் வென்றவர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் விமான நிலையத்திற்கு வந்திருந்ததோடு, விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியிலும் திரண்டிருந்த ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *