இது முதல் வெள்ளை அறிக்கை தான்; இறுதி வெள்ளை அறிக்கை அல்ல. வரும் காலங்களில் வெள்ளை அறிக்கை தேவைப்படாது.
திரும்பவும் வெள்ளை அறிக்கை தேவைப்படாத அளவுக்கு செயல்படுவோம்.
குடிசைக்கும், அடுக்குமாடி குடியிருப்புக்கும் ஒரே மாதிரி குடிநீர் வரி இருப்பதை மாற்ற வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது
பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் வர வேண்டிய மத்திய அரசின் மானியம் வரவில்லை.
தேவை இல்லாதவர்களிடம் சென்று சேரும் வருவாயை அரசாங்கத்திற்கு திருப்ப வேண்டியுள்ளது. அதிக அளவிலான பணம் இலவச திட்டங்கள், மானியங்களுக்கு செல்கிறது. மானியங்களால் பயன்பெறுவோர் குறித்த முறையான தகவல் இல்லை.
கடனை மானியங்களுக்காக செலவிட்டால் வட்டி அதிகரித்து கடன் சுமை உயரும். வரி ஏய்ப்புகளை சரி செய்தால் மட்டுமே வருவாயை பெருக்க முடியும்.