லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் நடித்ததோடு, நயன் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
ப்ளைண்ட் என்ற கொரியன் படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியிருக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம், தனது தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவி-க்கு நயன்தாரா பேட்டி ஒன்று கொடுக்க வேண்டும், என்ற நிபந்தனையோடு தான் படத்தை வாங்கியதாம்.
அதன்படி, விஜய் டிவி-க்கு நயன்தாராவும் பேட்டி கொடுத்துள்ளார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் இந்த பேட்டியில் நயன்தாரா, தனது திருமணம் பற்றியும் அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.