நாய் வளர்த்தால் இனி வரி செலுத்த வேண்டும்! – மாநகராட்சியின் அதிரடி உத்தரவு

செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் பல சீர்த்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வீடுகளில் நாய், ஆடு, மாடு, குதிரை வளர்ப்பவர்கள் இனி வரி செலுத்த வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாநகராட்சி கமிஷ்னர் கார்த்திகேயன், மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாநகரில் இயங்கும் இறைச்சி-மீன் கடைகளை ஒழுங்குபடுத்தவும், அங்கு சுகாதார முறையில் இறைச்சி-மீன்களை விற்பனை செய்வதை உறுதி செய்யவும் அவர்களுக்கு புதிய உரிம முறையை அமல்படுத்தி இருக்கிறார்.

இந்த உரிமம் பெறாதவர்கள் இனி மாநகராட்சி பகுதிகளில் இறைச்சி-மீன் விற்பனை செய்யக்கூடாது. அதே போல் சாலைகளில் மீன் -இறைச்சி வியாபாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. அவர்களுக்கு இந்த உரிமம் வழங்கப்பட மாட்டாது.

இனி வீடுகளில் நாய், மாடு, ஆடு, குதிரை வளர்த்தால் அதற்கு மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 வரி செலுத்த வேண்டும். இந்த வரியை செலுத்தி தங்களது வளர்ப்பு பிராணிகளை மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். இந்த வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *