‘கிரிக்பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அதன் பிறகு தெலுங்குப் படத்தின் மூலம் ரசிகர்களின் பேவரைட் நடிகரானவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார்.
தற்போது பாலிவுட் சினிமாவிலும் பிஸியாகி இருப்பவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடர்பவர்களை கொண்ட தென்னிந்திய நடிகை என்ற பெருமை ராஷ்மிகா மந்தனாவுக்கு கிடைத்துள்ளது. அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை (2 கோடி) தாண்டியுள்ளது.
இதன் மூலம், காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா மந்தனா நம்பர் ஒன் இடத்தை கைப்பற்றியுள்ளார்.