தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முதல் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கிய நிலையில், நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின.
டான் வென்ற திருச்சி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,
20 ஓவரில் சேப்பாக்கம் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திருச்சி அணி, 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் திருச்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.