கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என்ற அச்சம் இந்தியா முழுவதும் நிலவி வருகிறது. அதே சமயம், மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் ஓணம், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடுவதற்கும், கூட்டம் சேருவதற்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (ஆக.12) முதல் அமலுக்கு வருகிறது.
கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நாடு முழுவதுமான மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 50 சதவீத பாதிப்பு பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.