அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் நட்டி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
சைக்கோ த்ரில்லர் ஜானர் படமான இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதன்படி, ‘பிளாக் ஷீப்’ நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் எற்கனவே இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஷில்பா மஞ்சுநாத் இப்படத்தில் இணைந்துள்ளார்.
‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத் நட்டி படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.