வைரலாகும் ‘பிக் பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் பட்டியல்!

சினிமா

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் இதுவரை நான்கு சீசன்கள் ஒளிபரப்பான நிலையில், வரும் அக்டோபர் மாதம் ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது போட்டியாளர்கள் தேர்வில் பிக் பாஸ் குழு ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி, குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

பிக் பாஸ் தயாரிப்பு குழுவின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் வரை, இதுபோன்ற பட்டியல்கள் பல சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *