கேரள முதல்வரின் வாழ்க்கை திரைப்படத்தை கைப்பற்றிய தமிழக முதல்வர் நிறுவனம்!

சினிமா

மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் ஏப்ரல் 27 ஆம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற படம் ‘ஒன்’. கேரளாவின் தற்போதைய முதல்வர் பினராயன் விஜயின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இப்படத்தில் மம்மூட்டி பினராயி விஜயன் கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவருடன் சீனிவாசன், ஜோஜோ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அப்படத்தில் நடித்திருந்தனர்.

கேரள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தை தமிழிலும் வெளியிட ‘ஒன்’ படக்குழு முடிவு செய்த நிலையில், அப்படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை தமிழக முதல்வரின் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஆம், மலையாளப் படமான ‘ஒன்’ படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் திரையரங்கங்கள் திறந்தவுடன் ‘ஒன்’ படத்தை தமிழில் டப் செய்து வெளியிட ரெட் ஜெயண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *