விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளனர்.
பூவுலகு சுந்தரராஜன் தலைமையில் தொல்.திருமாவளவனை சந்தித்தவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட இந்த கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்த தகவலை தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.