தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான நடிகர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் வாகை சந்திரசேகருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.