ஆப் மூலம் வாடகை கார் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களை ஒருங்கிணைத்து வரும் ஓலா நிறுவனம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ள ஓலா நிறுவனம், இரண்டு வகைகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
அதன்படி எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ என இரண்டு வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் எஸ் 1 ஸ்கூட்டரின் விலை 99,999 ரூபாய் எனவும், எஸ் 1 ப்ரோ வகை ஸ்கூட்டரின் விலை 1,29,999 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.