சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி வழங்க அரசு ஆலோசனை

செய்திகள்

அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.800 கோடி வரை செலவிடுகிறது. தற்போது பள்ளிகள் மூடியுள்ள நிலையில், மாணவர்களுக்கு அரசு சார்பில் அரிசி உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, குடும்ப பொருளாதார சூழலால் மாணவர்களின் இடை நிற்றல் அதிகரித்து வரும் நிலையில், இதை தவிர்ப்பதற்காக சத்துணவில் முட்டியுடன் சேர்த்து ரொட்டி வழங்கலாமா? என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி வழங்கவும் அரசு ஆலோசித்து வருகிறதாம். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *