அருண் விஜய் படத்தில் நடித்த கங்கை அமரன்!

சினிமா

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, ராதிகா, யோகி பாபு, ராஜேஷ், போஸ் வெங்கட், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அருண் விஜயின் 33 வது திரைப்படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. பகலில் கதை காட்சிகளும், இரவில் சண்டைக்காட்சிகளும் என இரவு பகலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் மிக முக்கியமான திருப்புமுனை காட்சி ஒன்றில் பிரபல இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், ஜோதிடர் வேடத்தில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்று தான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்திருக்கும் கங்கை அமரன், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டுவதும் உண்டு. அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு, அருண் விஜய் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *