டி.என்.பி.எல் கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு

விளையாட்டு

தமிழ்நாடி பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. பின்னர் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 ரன்னில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

சாம்பியன் பட்டம் பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை பிடித்த திருச்சி வாரியர்ஸ் அணிக்கு ரூ.30 லட்சம் கிடைத்தது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பரிசுகளை வழங்கினார்.

3 வது முறையாக டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றியுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஏற்கனவே 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *