பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
90-களின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஒருவரான ஆனந்த கண்ணன், சிங்கப்பூர் வாழ் தமிழர் ஆவார். சிங்கப்பூரில் உள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த கண்ணன், சென்னை வந்து சம் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
மேலும், தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியவர், சில திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் மீண்டும் சிங்கப்பூர் சென்றவர், அங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியதோடு, கிராமிய கலைகள் பயிற்சி பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆனந்த கண்ணன், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். அவருடைய இறப்புக்கு தமிழ் திரை பிரபலங்களும், தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.