டெல்லி தீன் தயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
செப்டம்பர் 16,17,18 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதலமைச்சரான பிறகு மு.க.ஸ்டாலின் 3 வது முறையாக டெல்லி செல்கிறார்.