இந்தியா – வங்காளதேசம் இடையே 22 ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை!

வர்த்தகம்

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கு பல நாடுகள் தடை விதித்திருந்தது. அதன்படி, இந்தியா – வங்காளதேசம் இடையிலான விமான சேவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இந்தியாவுடனான விமான சேவையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ள வங்காள தேச விமான போக்குவரத்து துறை அமைச்சகம், அடுத்த வாரம் இந்தியாவிற்கு 12 விமானங்களை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

வங்காளதேசத்திலிருந்து டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக உள்ளது. அதேபோல், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லியிலிருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *