நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை படிபடியாக உயரத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.25 உயர்த்தப்பட்டது. இதன் மூலம், சென்னையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக விற்கப்படுகிறது.
மேலும், ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை இதுவரை ரூ.265 ஆக அதிகரித்திருப்பது மக்களை கவலை அடைய செய்திருக்கிறது.
இப்படி, சமையல் கேஸ் சிலிண்ட விலை ஏற்றம் தொடர்ந்துக் கொண்டிருப்பதால், பெட்ரோ விலை எப்படி லிட்டர் 100 ரூபாயை தாண்டியதோ, அதுபோல் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையும் 1000 ரூபாயை தாண்டுமோ, என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.