அதிமுக பிரமுகர் வெட்டி கொலை! – சோழவரத்தில் பரபரப்பு

செய்திகள்

சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சிலரம்பரச்ன் என்பவர், அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்தார். நேற்று முன் தினம் இரவு சுமார் 11 மணியளவில் சிலம்பரசன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் கொலையாளிகளை தேடிவந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்கிற ஆகாஷ், ரஞ்சித்குமார் ஆகியோர் நேற்று நள்ளிரவில் சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆகாஷ், ரஞ்சித்குமார் ஆகியோர் அந்த பகுதியில் கஞ்சா விற்பதாக சிலம்பரசன் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரை வெட்டி கொலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.

சரணடைந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *