விஜய், தனுஷ் ஆகியோரை தொடர்ந்து வசமாக சிக்கிய சூர்யா!

சினிமா

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான நுழைவு வரியை ரத்து செய்யுமாறு அல்லது சலுகை அளிக்குமாறு நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜய்க்கு கண்டனம் தெரிவித்ததோடு அபரதாமும் விதித்தார். அதேபோல், நடிகர் தனுஷும் இதுபோன்ற ஒரு வழக்கை தொடர, அவருக்கு எதிராகவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2007-2008 ஆம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீடு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் நடிகர் சூர்யா தரப்பிலும், வருமான வரி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், 2007-08, 2008-09ஆம் ஆண்டுகளுக்கு 3 கோடியே 11 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.

இந்நிலையில், தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காணப்பட்டதால், வரி செலுத்துவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும், என்று கோரி நடிகர் சூர்யா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

விஜய் மற்றும் தனுஷ் வழக்குகளை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் வழக்கையும் விசாரித்த எஸ்.எம்.சுப்பிரமணியம், வருமான வரித்துறையின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, நடிகர் சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் ஆகியோரைப் போல், நடிகர் சூர்யாவும் வருமானவரித்துறை கூறிய அளவு வரி செலுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *