விஷாலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சினிமா

விஷால் தயாரித்து நடித்த படம் ‘சக்ரா’. கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு எதிராக அப்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன. முன்னதாக விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’ படத்தினால் ஏற்பட்ட நஷ்ட்டம் தொடர்பாக டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும், படம் நடிப்பதாக கூறி அட்வான்ஸ் வாங்கிவிட்டு எதுவும் பேசாமல் இருப்பதாக லைகா நிறுவனமும் விஷால் மற்றும் அவருடைய சக்ரா படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க முடியாது, என்று அறிவித்தது. அதன்படி அறிவித்தபடி ‘சக்ரா’ திரைப்படம் வெளியானது. அதே சமயம், படத்தின் இரண்டு வார வசூல் மற்றும் ஆன்லைன் உரிமைக்கான விவரங்களை நீதிமன்றத்தில் விஷால் தரப்பு சமர்ப்பிக்க வேண்டும், என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள விஷால், ”எப்போதும் நீதியும் உண்மையும் வெல்லும் என்ற நம்பிக்கை பலித்திருக்கிறது. லைகா நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட எனக்கு மற்றும் சக்ரா படத்துக்கு எதிரான பொய் வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு பொய்யான வழக்கை முன்வைத்து என்னை துன்புறுத்தியதற்காக அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *