உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பிடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி தடுப்பூசி மட்டும் தான். அதனால் தான், உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வர, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கும் முடிவு செய்துள்ளது.
உலக முழுவதும் இப்படி ஒரு நிலை இருக்க, ஒரு கிராமத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்ப்பதற்காக ஆண்கள் மட்டும் இன்றி பெண்களும் மது குடிக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், கர்நாடக மாநிலத்தின், யாதகிரி மாவட்டத்தில் உள்ள ஒனகெரே கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கொரோனா தடுப்பூசியை தவிர்ப்பதற்காக தினமும் காலையிலேயே மதுபானம் குடிக்க தொடங்கி விடுகின்றனர். இதலா, கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போட முடியாம, சுகாதாரத்துறை ஊழியர்கள் பறிதவித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியுடன் அந்த கிராமத்துக்கு செல்வதும், அப்போது அங்கிருக்கும் பல பெண்களும், ஆண்களும் மதுபோதையில் இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்துக் கொண்டிருக்கும் நிலை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறதாம்.