எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழ் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தயாரித்திருக்கும் படம் ’மெய்ப்பட செய்’.
ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மதுனிகா அறிமுகமாகிறார். மற்றும் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ. ஏ.கே.சுந்தர், பெஞ்சமின்,ஞான பிரகாசம் E G P, சூப்பர் குட் சுப்ரமணி, விஜய கணேஷ், தவசி, அட்டு முத்து,சிவா , ராஜ மூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் நடித்துள்ளார்.
நாட்டில் நடக்கும் பாலியன் வன்கொடுமைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.