இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் ‘அவன் இவன்’. ஆர்யா, விஷால், ஜனனி, மது ஷாலினி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.
இதற்கிடையே, இப்படத்தில் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், பாபநாசம் கரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக சித்தரித்ததற்காக இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
நீண்ட வருடங்களாக விசாரணை நடந்து வந்த இந்த வழக்கில் இருந்து இயக்குநர் பாலா விடுவிக்கப்பட்டுள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வரை நீதிபதி வழக்கில் இருந்து விடுவித்துள்ளார்.
நடிகர் ஆர்யா மன்னிப்பு கேட்டதால் இந்த வழக்கில் இருந்து அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.