20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான அட்டவணையை சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.
செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள், வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும், என்று ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி டி20 உலகக்கோப்பைக்கான அணியை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், கேச் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசில்வுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்சல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
மேலும், டேனியல் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.