டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – ஜோ ரூட் 2 வது இடத்திற்கு முன்னேற்றம்

விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 2-வது இத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன் ஆகியோர் முறையே ஒரு இடம் சறுக்கி 3-வது, 4-வது இடத்தை பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 15 புள்ளிகளை இழந்தாலும் 5-வது இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 7 6-வது இடத்திலும், ரிஷாப் பண்ட் 7-வது இடத்திலும் தொடருகின்றனர்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 8-வது இடத்தை பிடித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 9-வது இடத்துக்கும், தென்ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக் 10-வது இடத்துக்கும் சறுக்கி உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ஆர்.அஷ்வின் (இந்தியா), டிம் சவுதி (நியூசிலாந்து),

ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா), நீல் வாக்னெர் (நியூசிலாந்து) ஆகியோர் முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6-வது இடத்தை பிடித்துள்ளார். காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா) 7-வது இடத்தை பெற்றுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 8-வது இடத்தில் நீடிக்கிறார்.

வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் 9-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்

பும்ரா 10-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட்இண்டீஸ்) முதலிடத்தில் நீடிக்கிறார். பென் ஸ்டோக்ஸ்

(இங்கிலாந்து) 2-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா (இந்தியா) 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். ஆர்.அஷ்வின்

(இந்தியா) 4-வது இடத்தில் நீடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *