மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு வேடம் ஒன்றி நடித்திருப்பதாக கூறப்படும் இப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஜ்மல் ‘பிசாசு 2’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படத்தில் நடித்திருக்கும் அஜ்மல், தற்போது இரண்டாவது முறையாக அவருடைய இயக்கத்தில் நடிக்கிறார்.