கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘சியான் 60’ என்று வைக்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் மூவிஸ் நிறுவனம் சார்பி லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், இன்று படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது.
அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு விக்ரமின் 60 வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விக்ரமுடன், அவருடைய மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் இப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.