இயக்குநர் விக்டர் இமானுவேலின் ‘மரபு’ ஃபர்ஸ்ட் லுக்ரிலீஸ்!

சினிமா

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘மரபு’. இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம்.

எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்.இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இந்தப்படத்தை தியேட்டர், ஓ.டி.டி. என்று பல தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் – நடிகைகள் :
நாயகன் : விக்டர்
நாயகி : இலக்கியா
வில்லன் : ஆனந்த பாபு
நாயகியின் அம்மாவாக : ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ
மக்கள் தொடர்பு : பிரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *