ஆப்கானிஸ்தானை தலிபான்கள் அமைப்பு கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டு தூதரை வாபஸ் பெற்ற இந்தியா, தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 120 பேரை அங்கிருந்து அழைத்து வந்துவிட்டது. மேலும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வரவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நாடு திரும்ப காத்திருந்த இந்தியர்கள் தலிபான்களால் கடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.