விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்தவர் பானுப்பிரியா. இவர் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ் மதுரை அரசு போக்குவரத்து பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயது என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இதற்கிடையே, விக்னேஷ் மதுரையில் பணியாற்றுவதால், மதுரையில் குடியேற விரும்பினார். ஆனால், பானுப்பிரியா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தரகாறு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்றும் வீடு தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், மனைவி பானுப்ரியாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பானுப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பானுப்பிரியாவின் கணவர் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.