செக்ஸ் மூலம் உடலுக்கு வலிமை கிடைப்பதாக, ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீராங்கனை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ரஷ்ய நாட்டை சேர்ந்த நீச்சல் வீராங்கனை அல்லா சிஷ்கினா, 3 தங்கப்பதகங்களை வென்றார்.
இந்த நிலையில், அல்லா சிஷ்கினா அளித்த பேட்டி ஒன்றில், உடலுறவு கொண்டதால் தனக்கு கூடுதல் பலம் கிடைத்ததாகவும், அதன் மூலமாக தங்கம் வென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கூறிய அவர், ”நான் எப்போதும் மருத்துவ ஆராய்ச்சிகளை பெரிதும் நம்பி இருப்பேன். அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால் உங்களுக்கு அதீத சக்தி வேண்டுமென்றால் நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும். உடலுறவு கொள்வது என்பது அவரவர் விருப்பம். உடலுறவு கொள்வதன் மூலம் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதனை நீங்கள் மேற்கொள்ளலாம். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு உடலுறவு நல்ல பலனை கொடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.