ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 3’ படத்தில் லாரன்ஸின் காதலியாக நடித்த ரஷ்ய நாட்டை சேர்ந்த நடிகையும், மாடலுமான அலெக்ஸாண்ட்ரா தூக்கி தற்கொலை செய்துக்கொண்டார்.
24 வயதாகும் நடிகை அலெக்ஸாண்ட்ரா தனது காதலருடன் கோவாவில் வசித்து வந்த நிலையில், கடந்த வியாழனன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
காதலரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்ததால், கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த நடிகை அலெக்ஸாண்ட்ரா, அதன் காரணமாகவே தற்கொலை செய்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
ஆனால், மர்ம மரணம் என்று வழக்குப் பதிவு செய்துள்ள கோவா போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.