புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திகள் மாநிலம்

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, சென்னை அருகே உள்ள தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி அமைக்கப்படுகிறது.

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர் உள்பட 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்

திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும்.

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மதிப்பூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சுய உதவி குழுக்களை மேம்படுத்த ரூ.188 கோடி சமூக நிதி வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *