யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘வீரப்பனின் கஜானா’. காடும் அதை சார்ந்தவைகளையும் மையமாக வைத்து உருவாகும் இப்படம் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கொலை குற்றவாளி வீரப்பனின் குடும்பத்தார், தலைப்பில் வீரப்பன் பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று கேட்டுக் கொண்டார்களாம். இதையடுத்து, ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ள படக்குழு விரைவில் புதிய தலைப்பை வெளியிட இருக்கிறார்கள்.
வீரப்பனுக்கும் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும், இது தொடர்பாக நடிகர் யோகி பாபுக்கு வீரப்பன் தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததால், தலைப்பை மாற்ற படக்குழு ஒப்புக்கொண்டதாம்.