யாகூ நிறுவனம் இந்தியாவில் இயங்கி வந்த அதன், செய்தி இணையதள சேவையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. புதிய அன்னிய நேரடி முதலீட்டு விதியின் கீழ், இந்தியாவில், டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை குறைத்ததையடுத்து, யாகு நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இதனால், யாகூ செய்திகள், யாகூ கிரிக்கெட், நிதி, பொழுதுபோக்கு, மேக்கர்ஸ் இந்தியா ஆகிய சேவைகள் நிறுத்தப்படுகின்றன. இவர்ரில் நேற்றில் இருந்து உள்ளடக்கங்கள் எதுவும் இடம்பெறாது. அதே சமயம், யாகூ மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும், அதன் சேவைகள் வழக்கம் போல் தொடரும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.