தமிழகத்தில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படும், என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சட்டசபையில் அறிவித்தார்.
இது குறித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசுகையில், “இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும். ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி வழங்கப்படும். கல்விக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாம்களில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும்.
இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், முகாம்களை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் ரூ.6 கோடி என ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்தார்.